விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 விரைவில் தொடங்கவுள்ளது.
அக்டோபர் மாத முதல் வாரத்தில் பிக் பாஸ் சீசன் 9 திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பிரமாண்ட தொடக்கத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. வெளி உலகத் தொடர்பின்றி 100 நாள்கள் பிரபலங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நிகழ்ச்சியே பிக் பாஸ். இடையிடையே போட்டிகளும் நடத்தப்படும்.
இதில், மக்கள் மனங்களைக் கவர்ந்த போட்டியாளர் அதிக வாக்குகள் பெற்று போட்டியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 9வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. கடந்த சீசனை போன்று 9வது சீசன் நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக நுழையவுள்ளவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பாக்கியலட்சுமி தொடரில் இனியா என்ற பாத்திரத்தில் நடித்து மக்களைக் கவர்ந்த நேஹா இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் தனது சகோதரர் விஜே விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது விஷாலுக்குத் தேவையான திட்டங்களை மறைமுகமாக இவர் வகுத்துக்கொடுத்தார். இந்த முறை நேஹா வருவது உறுதியானால், பொழுதுபோக்கிற்கும், வியூகங்களுகும் பஞ்சம் இருக்காது என்பதே ரசிகர்கள் கருத்தாக உள்ளது.
மேலும், சிந்தியா வினோலின் என்பவரும் பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளராக பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகரும் நடன இயக்குநருமான சாண்டி மாஸ்டரின் மைத்துனியாவார்.
சிந்தியாவும் தொழில்முறை நடனக் கலைஞராவார். இவர் பிக் பாஸ் போட்டிக்கு வருவது உறுதியானால், இவரின் மற்றொரு கோணத்தை நிகழ்ச்சியில் காணும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க | சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.