கலாம் பயோபிக் பட போஸ்டர்.  படம்: எக்ஸ் / ஓம் ராவத்.
செய்திகள்

கலாம் பயோபிக்கில் தனுஷை தேர்ந்தெடுத்தது ஏன்? ஓம் ராவத் விளக்கம்!

அப்துல் கலாம் பயோபிக் குறித்து ஓம் ராவத் பேசியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

அப்துல் கலாம் பயோபிக்கில் நடிக்க நடிகர் தனுஷை விட யாரும் சிறந்தவர்கள் இல்லை என அதன் இயக்குநர் ஓம் ராவத் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது.

ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத் இந்தப் படத்தை இயக்குவதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

பயோபிக் சவாலானது...

இது குறித்து பிடிஐக்கு அளித்த நேர்காணலில் ஓம் ராவத் கூறியதாவது:

தனுஷ் தனிச் சிறப்புடைய நடிகர். இந்தப் படத்தில் நடிக்க அவரை விட சிறந்த நடிகர் யாருமில்லை. அவர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இந்தப் படத்தில் அவர் இருந்தால் நன்றாக இருக்குமென நான் மிகவும் எதிர்பார்த்தேன்.

எனக்கு பயோபிக் படங்கள் எடுக்க மிகவும் பிடிக்கும். அது மிகவும் சவாலான ஒரு வகைமை. எந்தவொரு ஆளுமைக் குறித்தும் படம் எடுப்பது கடினமானது.

பயோபிக்கில் எதை சொல்லாமல் விடுகிறோம் என்பது முக்கியம்...

எந்தப் பகுதியை படமாக எடுக்கிறோம் என்பதும் எதை எடுக்காமல் இருக்கிறோம் என்பதும் மிகவும் முக்கியமானது.

சில விஷயங்களை நீங்கள் விட்டுவிட வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த பகுதிகள் நல்லது. எதை விடுகிறீர்கள் என்பது மிக நல்லது.

உத்வேகம் பிறக்கும் வகையில் படத்தை உருவாக்க வேண்டும். கலாம் இளைஞர்களுக்கு உத்வேக் அளிப்பவராக இருந்தார். என் இளைமைக் காலத்தில் அவரது புத்தகங்கள் என் வாழ்க்கையை மாற்றின.

நிறைய பேருக்கு உத்வேகம் ஊட்டும் வகையில் குறிப்பாக இளைஞர்களுக்காக அமைந்தால் நான் மிகவும் பெருமைப்படுவேன். அவரும் லோகமான்ய திலகரைப் போல இளைஞர்களை நம்பினார்.

Director Om Raut is elated to be working with Dhanush on “Kalam: The Missile Man of India” as he believes there is no one better than the south superstar to portray APJ Abdul Kalam on the big screen.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிப்மரில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

குடிநீருக்காக ரூ.9 கோடியில் தானியங்கி குளோரின் கலப்பு சிறு ஆலைகள்: புதுவை அமைச்சா் லட்சுமிநாராயணன் தகவல்

கன்னங்குறிச்சி பகுதிக்கு காலதாமதமாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்: பொதுமக்கள் தவிப்பு

செந்தாரப்பட்டி ஏரியில் 5 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

சா்வதேச போட்டிகளில் மாணவா்களின் பங்கேற்பை அதகரிக்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT