சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் 'ஸ்பிரிட்' படத்திலிருந்து தான் விலகியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த செய்திகளுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
'அனிமல்' படத்தைத் தொடர்ந்து சந்தீப் வாங்கா இயக்கி வரும் படம் 'ஸ்பிரிட்'. பிரபாஸ் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் திரிப்தி டிம்ரி, விவேக் ஓபராய் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கின்றனர்.
2027-ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக, பிரகாஷ்ராஜுக்கும் படக்குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் படத்திலிருந்து விலகியதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அப்துல் கலாம், இளையராஜாவின் பயோபிக் படங்களில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு முன்பே வந்திருந்தது. இதில் அப்துல் கலாம் பயோபிக் படத்தை 'ஆதிபுருஷ்' பட இயக்குநர் ஓம் ராவுத்தும், இளையராஜா பயோபிக் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரனும் இயக்கவிருக்கிறார்கள்.
'கேப்டன் மில்லர்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் இரண்டாவது முறையாக அருண் மாதேஸ்வரனுடன் இணையவிருக்கிறார் என அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். கடந்த சில நாள்களாக, இத்திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், இயக்குநரை மாற்றவிருக்கிறார்கள் என்ற தகவலும் பரவி வந்தன.
'தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கப்போவதில்லை எனப் பரவும் தகவல் உண்மையற்றது; லோகேஷ் கனகராஜின் 'டிசி' படத்தை முடித்த பிறகு திட்டமிட்டபடி இப்படத்துக்கான வேலைகளை அவர் தொடங்குவார்'' எனத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மமிதா பைஜூ தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கிறார். கடந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான 'டியூட்' ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. 'ப்ரேமலு' படத்தின் வெற்றிக்குப் பிறகே தமிழில் வரிசையாகப் படங்களை கமிட் செய்தார். அவர் நடித்திருக்கும் 'ஜனநாயகன்', 'கர', 'சூர்யா 46', 'இரண்டு வானம்' ஆகிய திரைப்படங்களும் ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன.
இவற்றைத் தாண்டி, மலையாளத்தில் 'ப்ரேமலு' பட இயக்குநர் கிரீஷ் ஏ.டி. நிவின் பாலியை வைத்து இயக்கும் 'பெத்தல்கம் குடும்ப யூனிட்' படத்திலும் மமிதா பைஜூ நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக மலேசியாவில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்வில் மமிதா பைஜூ, விஜய்யின் 'எல்லா புகழும்' பாடலின் ஓரிரு வரிகளை மேடையில் பாடியிருந்தார். அந்தக் காணொலி இணையத்தில் வைரலாகி, ட்ரோல் செய்யப்பட்டது. அதற்கு பதிலளித்த மமிதா பைஜூ, 'மக்கள் இதை வெறும் பொழுதுபோக்காகவே பார்க்கிறார்கள். நானும் அதை அப்படித்தான் பார்க்கிறேன். அது நல்ல ஃபன்!'' என்று கூறியிருக்கிறார்.
'மின்சார கனவு' படத்தில் இடம்பெற்ற 'வெண்ணிலவே வெண்ணிலவே' பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
ராஜிவ் மேனன் இயக்கத்தில் 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மின்சார கனவு'. அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் பாடல் குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் ரஹ்மான், 'ஒரே பாடலுக்குள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருந்ததால், அது எனக்கு மிகப்
பெரிய சவாலாக இருந்தது. இந்தப் பாடலுக்கு இசையமைக்கும் சமயத்தில் நான் நோன்பில் இருந்தேன். அப்போதுதான் இந்த 'வெண்ணிலவே வெண்ணிலவே' பாடலுக்கான டியூன் எனக்கு வந்தது. அந்த டியூனை வாசித்தபோது நான் அழுதுவிட்டேன். இதுதான் நாம் எதிர்பார்த்த அந்த டியூன் என்று உணர்ந்தேன்'' எனப் பேசியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.