FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மைக்கேல் திரைப்படத்தின் ஓடிடி தேதி! இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

மைக்கேல் திரைப்படத்தின் ஓடிடி தேதி குறித்து...

Updated On : 28 ஜூலை 2026, 2:06 pm IST
ஜாபர் ஜாக்சன்
பகிர்:

உலகளிலேயே அதிகம் வசூலித்த பயோபிக் திரைப்படமான மைக்கேல் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அன்டொய்ன் ஃபகா இயக்கத்தில் உருவான மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான மைக்கேல் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஏப். 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் ஜாபர் ஜாக்சன் (மைக்கேல் ஜாக்சனின் உறவினர்) நடித்திருந்தார்.

ஆனால், இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் மிகப்பெரிய பயோபிக் படங்களில் இதுவே சுமாரானது என்றும் விமர்சனங்கள் வந்தன. இந்தக் கலவையான விமர்சனங்களால் படம் வணிக அளவில் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஆனால், இப்படம் உலகளவில் 1 பில்லியன் டாலர் (ரூ. 9,600 கோடிக்கும் மேல்) வசூலித்து ஹாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக ஒரு பயோபிக் திரைப்படம் அபாரமான வசூலைச் செய்திருப்பது இதுவே முதல்முறை. இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மைக்கேல் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் ஓடிடியில் ஆக. 10 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் பிரைம் ஓடிடியில் கட்டணம் கட்டி பார்க்கும் வசதியில் வெளியாகியிருந்தது தற்போது சந்தா இருந்தாலே பார்க்கும் முறையில் வெளியாக உள்ளது.

Details have emerged regarding the OTT release of Michael*, the highest-grossing biopic worldwide.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments