பாடகி சின்மயி திரௌபதி - 2 திரைப்படத்தில் பாடியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மோகன். ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி - 2 திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் பாடலான எம்கோனே பாடலைச் சின்மயி பாடியிருந்தார்.
இதன் புரோமோ வெளியானதும் ரசிகர்கள், “பெண் சுதந்திரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தட்டிக்கேட்கும் சின்மயி, பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரான சுயசாதி திரைப்படங்களை எடுக்கும் இயக்குநர் மோகன். ஜி திரைப்படத்திற்கு ஏன் பாடினார்? எனக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், சின்மயி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எம்கோனே குறித்து எனது மனமார்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறேன். இசையமைப்பாளர் ஜிப்ரானை எனக்கு 18 ஆண்டுகளாகத் தெரியும். அவர் அழைத்து இப்பாடலைப் பாடக்கேட்டதால் எப்போதும் போல் சென்று பாடினேன். அப்போது, அவரும் அங்கு இல்லை என நினைக்கிறேன். எப்படிப் பாட வேண்டும் என்கிற குறிப்பு இருந்ததால் அதை பாடி முடித்ததும் கிளம்பினேன்.
இந்தப் பாடலைச் சுற்றியுள்ள விஷயங்களை நான் இப்போது தான் அறிந்துகொள்கிறேன். முன்பே இதை அறிந்திருந்தால், என் கொள்கைகளுக்கு முரண்பட்டவை என்பதால் நான் ஒருபோதும் இதில் இணைந்திருக்க மாட்டேன். இதுதான் முழு உண்மை” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: சண்முக பாண்டியனின் கொம்புசீவி வெளியீடு அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.