பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் சுபிக்ஷாவை சான்ட்ரா தாக்கி விளையாடும் விடியோ வெளியாகியுள்ளது.
சன்ட்ரா அணியின் எல்லைக்குட்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் சுபிக்ஷாவை எழுப்புவதற்காக அவரின் மடி மீது அமர்ந்து அவரைத் தாக்கும் வகையில் சா்ன்ட்ரா செயல்படுகிறார்.
இந்த விடியோவில் பலரும் சான்ட்ராவின் ஆட்டத்தை குறை கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் சுபிக்ஷாவின் மீது தவறு உள்ளதாகவும், அவரின் அணிக்குட்பட்ட நாற்காலியில் இவர் ஏன் அமர வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 59 வது நாளை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கான கேப்டனாக மேடை நடனக் கலைஞர் ரம்யா பொறுப்பேற்றுள்ளார்.
இந்த வாரத்திற்கு ஜமீன்தாரும் நெக்லஸும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒவ்வொரு வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. சினிமாவில் பிரபலமடைந்த பாத்திரத்தின் சாயலில் போட்டியாளர்கள் வேடமேற்றுள்ளனர்.
இதில், ரெட்ரோ அணி சார்பில் திருவிளையாடல் படத்தில் நாகேஷின் தருமி பாத்திரத்தை சுபிக்ஷா ஏற்றுள்ளார். இதேபோன்று மாடர்ன் அணி சார்பில் மதராசப்பட்டினம் படத்தின் எமி ஜாக்சன் பாத்திரத்தை சான்ட்ரா ஏற்றுள்ளார்.
இரு அணிகளும் தங்களுக்கு வழங்கப்பட்ட நெக்லஸை பாதுகாக்க வேண்டும். இதனால், பலரும் அணிகலன் வைக்கப்பட்டுள்ள மேடையின் அருகிலேயே படுத்து உறங்குகின்றனர். நெக்லஸை பாதுகாப்பாக வைத்திருப்பவர்களே போட்டியில் வெற்றி பெற்றவர்கள்.
இந்நிலையில், நெக்லஸை கவர்ந்து செல்வதற்காக மாடர்ன் அணியின் பக்கம் உள்ள நாற்காலியில் சென்று சுபிக்ஷா அமர்ந்துகொள்கிறார்.
சுபிக்ஷாவை வெளியேற்ற முயற்சித்தும் முடியாததால், அவர் மீது சான்ட்ரா அமர்ந்துகொண்டு அவருக்கு இடையூறு ஏற்படுத்துகிறார். அப்போது சுபிக்ஷாவை தாக்கவும் செய்கிறார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: ஆதிரைக்கு பதிலாக பிரவீன் சென்றிருக்கலாம்! ரசிகர்கள் கருத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.