டியூட்-க்கு அனுமதியளித்த இளையராஜா!
டியூட் திரைப்படத்தில் இளையராஜா பாடல்கள் இடம்பெற்றது குறித்து...
டியூட் திரைப்படத்தில் இடம்பெற்ற தன் பாடல்களுக்கு இளையராஜா அனுமதியளித்துள்ளார்.
திரைப்படங்களில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ள தனது பாடல்களை நீக்கக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார்.
அண்மையில், 'டியூட்' படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த 'கருத்த மச்சான்' மற்றும் 'நூறு வருஷம்' பாடல்களைப் பயன்படுத்திருந்தனர். ஆனால், இளையராஜாவிடம் அதற்கான அனுமதியைப் பெறவில்லை.
Advertisement
Advertisement
இதனால், இளையராஜா தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, டியூட் திரைப்படத்தில் இளைராஜா பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில், ஓடிடி வெளியீட்டிலும் இதன் தாக்கம் இருக்கும் என்பதால் டியூட் தயாரிப்பு நிறுவனம் இளையராஜாவுக்கு ரூ. 50 லட்சம் வழங்கி, வழக்கை சமரசமாக்கிக் கொண்டனர். தொடர்ந்து, இளையராஜாவும் தன் பாடல்களைப் பயன்படுத்த அனுமதியும் வழங்கியுள்ளார்.
முன்னதாக, டியூட் திரைப்படத்தை தயாரித்த மைத்ரி நிறுவனம் அஜித்தின் குட் பேட் அக்லியையும் தயாரித்திருந்தது. அப்படத்திலும், இளையராஜாவின் பாடல்களுக்கு அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்!
ilaiyaraaja allows his songs in dude movie
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.