நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மே திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடியைத் தாண்டியதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் உருவான தேரே இஷ்க் மே திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ஹிந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளும் அதிகரித்து வருகின்றன.
தமிழிலும் பலருக்கு இப்படம் பிடித்திருந்தாலும் சரியான புரோமோஷன் இல்லாததால் அதிக திரைகளில் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உலக அளவில் இந்தப் படம் ரூ.118.76 கோடி வசூலித்தாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தனுஷின் இட்லி கடை திரைப்படம் வணிக ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.