நடிகர் ரஜினிகாந்தின் படையப்பா படம் அடுத்த வாரம் மறுவெளியீட்டுக்கு வரவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கதைநாயகனாக ரஜினிகாந்த், நாயகியாக (மறைந்த) சௌந்தர்யா, வில்லி பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து, 1999-ல் வெளியான படையப்பா படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு முக்கிய திருப்பமாகவும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்ற படையப்பா படத்தில் நடிகர்கள் சிவாஜி கணேசன், மணிவண்ணன், நாசர், அப்பாஸ், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி உள்ளிட்டோரும், சிறப்புத் தோற்றங்களில் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பிரகாஷ் ராஜும் நடித்தனர்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரையுலக பயணத்தைக் கொண்டாடும் வகையிலும், அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையிலும் டிசம்பர் 12 ஆம் தேதியில் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: கடின உழைப்பின் அடையாளம்... 23 ஆண்டுகளுக்குப் பிறகான ரேஸிங் அனுபவம் பகிர்ந்த அஜித்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.