நடிகர் ப்ரஜின் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறுவதற்காக பிக் பாஸ் வீட்டின் கதவு திறந்தபோது, அவருக்கு முன்பாக பிக் பாஸ் வீட்டிலிருந்து அவரின் மனைவி சான்ட்ரா வெளியே ஓடினார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த சக போட்டியாளர்கள் அவரை உள்ளே வருமாறு அழைத்தனர். பிக் பாஸ் கதவுக்கு வெளியே சென்ற ப்ரஜின், மனைவி சான்ட்ராவை சமாதானம் செய்து உள்ளே அனுப்பி வைத்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 9 வாரங்களைக் கடந்து 10 வது வாரத்தை எட்டியுள்ளது. 9 வது வார இறுதியில், குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக போட்டியில் இருந்து நடிகர் ப்ரஜின் வெளியேற்றப்பட்டார்.
இதன்மூலம் இந்த சீசனில் வைல்டு கார்டு மூலம் நுழைந்த போட்டியாளர் முதல்முறையாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
வெளியே இருந்து போட்டியைப் பார்த்துவிட்டு 4 வாரங்கள் கழித்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ப்ரஜின், கடந்த வாரம் முதலே சிறப்பான பங்களிப்பை அளித்துவந்தார்.
கடந்த இரு வாரங்களாக மக்கள் மனங்களைக் கவர்ந்த ப்ரஜின், யாரும் எதிரபாராத வகையில் போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார்.
சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்ததப் போலவே, இவரின் மனைவியும் சக போட்டியாளருமான சான்ட்ராவும் அதிர்ச்சி அடைந்து அழத் தொடங்கினார்.
ப்ரஜின் வெளியேறக் காரணம்?
கடந்த இரு வாரங்களாக போட்டியை புரிந்து கொண்டு நன்கு விளையாடியதாகவும், ஆனால், வெளியேறுவதற்கான காரணம் என்ன என்றே புரியவில்லை என ப்ரஜின் தனது மனைவியிடம் கூறினார்.
அதற்கான காரணம் என்ன என்பது தனக்கு தெரியும் என்றும், இதனை வெளியே சென்று பார்க்கும்போது நீயும் புரிந்துகொள்வாய் என சான்ட்ரா குறிப்பிட்டார்.
இதனிடையே பிக் பாஸ் வீட்டிற்குள் ப்ரஜினுக்கான நேரம் முடிந்து விட்டதாகவும் கதவு திறக்கும்போது வெளியேற வேண்டும் எனவும் பிக் பாஸ் உத்தரவிட்டார். இதனை ஏற்றுக்கொண்டு ப்ரஜின் காத்துக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த கதவு வழியே ப்ரஜினுக்கு முன்பு சான்ட்ரா வெளியேறினார்.
எனினும் சான்ட்ராவை சமாதானம் செய்து, உள்ளே அனுப்பி வைத்தார் ப்ரஜின். கணவன் - மனைவி இடையேயான பிணைப்பை இந்த விடியோ உணர்த்துவதாக பலர் பாராட்டினாலும், பிக் பாஸ் போன்ற பெரிய வாய்ப்பை இவ்வாறு உதாசினப்படுத்தக் கூடாது என பலர் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | போட்டி வேறு, உறவு வேறு! பாராட்டுகளைப் பெறும் ப்ரஜின் - விஜய் சேதுபதி நட்பு!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.