முகப்பு
செய்திகள்

தனுஷ் 54 படப்பிடிப்பை முடித்த சுராஜ்!

நடிகர் தனுஷின் 54ஆவது படத்தின் படப்பிடிப்பு குறித்து...

Updated On : 8 டிசம்பர், 2025 at 5:47 PM
தனுஷ் உடன் சுராஜ் வெஞ்சரமூடு. - படம்: இன்ஸ்டா / சுராஜ் வெஞ்சுரமூடு.
பகிர்:

நடிகர் தனுஷின் 54ஆவது படத்தில் தனது படப்பிடிப்பை முடித்ததாக மலையாள நடிகர் சுராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 10ஆம் தேதி நடிகர் தனுஷ் - விக்னேஷ் ராஜா படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

நடிகர் தனுஷ் இறுதியாக நடித்த தேரே இஷ்க் மே தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஹிந்தியில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது.

Advertisement

தற்போது, போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷின் 54-வது படமாக உருவாகிவரும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கிறார்கள் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், தனது படப்பிடிப்பை முடித்ததாக, மலையாள நடிகர் சுராஜ் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.