பார்வதி நாயர் நடித்துள்ள உன் பார்வையில் திரைப்படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தமிழில் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர், விஜய்யின் கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே, நடிகை பார்வதி நாயர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் உன் பார்வையில். திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை கபிர் லால் இயக்கியுள்ளார்.
கணவர் மற்றும் இரட்டை சகோதரிகளைக் கொன்றவர்களை கண்டுப்பிடிப்பதற்காக, பார்வதி நாயரின் பயணங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராம், மகேந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், உன் பார்வையில் திரைப்படம் வரும் டிச. 19 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சாந்தனு - அஞ்சலி நாயர் நடிக்கும் புதிய படம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.