சாந்தனு மற்றும் அஞ்சலி நாயர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
இப்படிக்கு காதல், யாக்கை திரி போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்ற பரத் மோகன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த புதிய படத்துக்கு மெஜந்தா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
முன்னதாக, நடிகர் சாந்தனு நடித்த ப்ளூ ஸ்டார், பல்டி திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நிலையில், தற்போது மெஜந்தா படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக, மலையாள மொழிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை அஞ்சலி நாயர் நடிக்கிறார்.
மேலும் இந்தப் படத்தில், பகவதி பெருமாள், படவா கோபி, அர்ச்சனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தரன் குமார் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், மெஜந்தா படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிக்க: ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய அந்த 10 நிமிடம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.