அசோக் செல்வன், நிமிஷா சஜயன் 
செய்திகள்

அசோக் செல்வனின் புதிய பட படப்பிடிப்பு நிறைவு!

அசோக் செல்வனின் புதிய படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர்கள் அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் அசோக் செல்வன் தமிழில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அதேபோல், சித்தா மற்றும் டிஎன்ஏ திரைப்படங்களில் நடித்து அசத்திய நிமிஷா சஜயன் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை சிபி மணிகண்டன் என்பவர் இயக்குகிறார்.

குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

SCROLL FOR NEXT