பிக் பாஸ் 9: திடீர் ட்விஸ்ட்! இந்த வாரம் இருவர் வெளியேற்றம்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இருவர் வெளியேற்றம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறியுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 11 வது வாரத்தை எட்டியுள்ளது. விஜய் சேதுபதி போட்டியாளர்களை செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் விதிகளை மீறும் வகையில் ஒலிவாங்கியை அகற்றிவிட்டு பார்வதி, கமருதீன் ரகசியம் பேசியதால், அனைவருக்குமான அடிப்படை உணவுப் பொருள்கள் இந்த வாரம் பறிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதற்காக, நேற்று(டிச. 13) நடந்த நிகழ்ச்சியில், ஒலிவாங்கியை நீங்கள் போட வேண்டாம் என்று இருவரையும் விஜய் சேதுபதி கண்டித்தார். அதன்படி நேற்றைய நிகழ்ச்சியில் பார்வதி, கமருதீன் ஒலி வாங்கியை போடாமல் பேசினர்.
இருவரும் மன்னிப்புக் கேட்ட நிலையில், நிகழ்ச்சி நிறைவடையும்போது இருவரையும் ஒலிவாங்கி போடச்சொல்லி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் விஜய் சேதுபதி.
ஒவ்வொரு வாரமும் மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார். அதன்படி நேற்றைய நிகழ்ச்சியில் ரம்யா ஜோ வெளியேறினார்.
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் வியானா வெளியேறவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்றிரவு(டிச. 7) வெளியாகும் எபிசோடில் தெரியவரும்.
இந்த வாரம் ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் இருவர் வெளியேறியுள்ளனர்.
கடந்த வாரங்களில் நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கெமி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
இதையும் படிக்க: அஜித்துடன் செல்ஃபி எடுத்த ஸ்ரீலீலா..! ஏகே 64 ஒத்திகையா?
Two contestants have been eliminated from the Bigg Boss show this week.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.