நடிகர் யோகி பாபு புரமோஷன்களுக்கு ஏன் வருவதில்லை என்கிற கேள்விக்கு கோபமடைந்தார்.
நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மேக்ஸ். இப்படத்தின் இயக்குநர் விஜய் கார்த்திகேயன் தற்போது மார்க் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இதிலும் நாயகனாக சுதிப்பே நடித்திருக்கிறார். அதிரடியான ஆக்சன் திரைப்படமாக உருவான இது கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு நேற்று (டிச.15) சென்னையில் நடைபெற்றது. அப்போது, கேள்வி பதில் நிகழ்வின் போது நடிகர் யோகி பாபுவிடம், “ஏன் சிறிய திரைப்படங்களின் புரமோஷனுக்கு வருவதில்லை?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.
இதனைக் கேட்டதும் யோகி பாபு, 'இந்தப் படத்தைப் பற்றி கேளுங்கள்’ என கோபமடைந்தார். பின், “நேரம் இருந்தால் வரமாட்டனா? சிறிய திரைப்படங்களில் நான் நகைச்சுவை நடிகராகத்தான் நடித்திருப்பேன். ஆனால், இறுதியாக நாயகன் அளவிற்கு முன்னிலைப்படுத்துகிறார்கள். அதில் எப்படி என்னால் கலந்துகொள்ள முடியும்? என்றார்.
இதையும் படிக்க: மீண்டுமா? கௌரி கிஷனைத் தொடர்ந்து முகம் சுளித்த கிச்சா சுதீப்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.