நடிகர் ரன்வீர் சிங் 
செய்திகள்

இப்படியும் ஒரு பிக்அப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

துரந்தர் திரைப்படம் மிகப்பெரிய தொகையை வசூலித்துள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.

இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், அக்‌ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத் நடிப்பில் உருவான திரைப்படம் துரந்தர்.

பாகிஸ்தானில் உளவுப்பணி பார்க்கும் இந்திய ராணுவ வீரரின் கதையாக உருவான இப்படம் பல உண்மைச் சம்பங்களையும் கதாபாத்திரங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, படம் முழுவதும் பாகிஸ்தானில் நடைபெறுவது போன்ற காட்சிகளும் 3.30 மணிநேரம் அளவுகொண்ட திரைப்படத்தில் பெரிய தொய்வாக அமையாதது படத்திற்கு பலமாக அமைந்திருந்தது. இருந்தும், வசூலில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.

ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக வில்லனாக நடித்த அக்‌ஷய் கன்னாவின் நடன ரீல்ஸ் இன்ஸ்டாகிராமில் வைரலானதால் இப்படத்திற்கான டிக்கெட்கள் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டன.

மேலும், தற்போது பாகிஸ்தானில் உளவு பார்க்கச் செல்வதுபோன்ற ரீல்ஸுகளும் வைரலாகி வருவதால் இரண்டாம் வாரத்தில் உலகளவில் ரூ. 640 கோடி வரை வசூலித்து சக்கைபோடு போட்டு வருகிறது துரந்தர்.

இந்தாண்டு இறுதிவரை வேறு பெரிய படங்கள் இல்லையென்பதால் துரந்தர் ரூ. 1000 கோடியை நெருங்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT