அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!
மிருணாள் தாக்குரின் டெகாய்ட் டீசர் குறித்து...
பிரபல தெலுங்கு நடிகர் அடிவி சேஷ் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்குர் இணைந்து நடித்துள்ள ‘டெகாய்ட்’ படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிறது.
முதலில் தெலுங்கில் வெளியான இந்தப் பட டீசர் யூடியூபில் ஒரு கோடி பார்வைகளைக் (1.6 கோடி) கடந்து சாதனை படைத்துள்ளது.
தெலுங்கு நடிகர் அடிவி சேஷ் தெலுங்கில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். இவரது திரைப்படங்கள் த்ரில்லர் பாணியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
சிறையிலிருந்து தப்பித்து வரும் நாயகன், அதற்குக் காரணமான நாயகியைப் பழிவாங்கும் கதை எனக் கூறப்படுகிறது.
இந்தப் படம் வரும் மார்ச்.19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் அனுராக் காஷ்யப், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
summary