சிக்மா படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்ததாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, ‘சிக்மா’ எனப் பெயரிட்டுள்ளனர். நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். தமன் இசையமைக்கிறார்.
ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் அண்மையில் படப்பிடிப்பு முடிந்தது.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய ஜேசன் விஜய், “சிக்மா திரைப்படத்தை 80 நாள்களில் எடுக்க திட்டமிட்டோம். ஆனால், அதற்கு முன்பே படப்பிடிப்பை முடித்தோம். லைகா போன்ற பெரிய நிறுவனம் மூலம் இயக்குநராக அறிமுகமாவதைப் பாக்கியமாகவே கருதுகிறேன். தயாரிப்பு தரப்பிலிருந்து எனக்கு முழு ஆதரவையும் கொடுத்து என்மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.