செய்திகள்

ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தின் டீசர்!

சிக்மா படத்தின் டீசர் வெளியானது.

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படமான சிக்மா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கும் இந்தப் படத்துக்கு, தமன் இசையமைக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

மேலும், இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிக்மா படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகியுள்ளது.

The teaser for the film Sigma has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கௌதம் கம்பீரை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமா? அமித் மிஸ்ரா பதில்!

2025! கலிஃபோர்னியா காட்டுத் தீ முதல் இலங்கையின் டிட்வா வரை... மனிதனை அச்சுறுத்திய இயற்கை பேரிடர்கள்!

அறிமுக வர்த்தகத்தில் 8% சரிந்த கேஎஸ்ஹெச் இன்டர்நேஷனல்!

Petrol Tank-ல் ரூ.56 லட்சம் ஹவாலா பணம்! கேரளாவிற்கு கடத்திய நபர் கைது!

”பாஜக பெற்றெடுத்த பிள்ளை விஜய்!”: திருமா | செய்திகள்: சில வரிகளில் | 23.12.25

SCROLL FOR NEXT