dinmani online
செய்திகள்

வைப் வித் எம்கேஎஸ் புரோமோ! இளைஞர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடும் நிகழ்ச்சி!

இளைஞர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடும் நிகழ்ச்சியின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

இளம் தலைமுறையினருடன் தமிழக முதல்வர் கலந்துரையாடும் “வைப் வித் எம்கேஎஸ்” நிகழ்ச்சியின் முன்னோட்ட (புரோமோ) விடியோ வெளியாகியுள்ளது.

இளம் தலைமுறையினருடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடும் நிகழ்ச்சி “வைப் வித் எம்கேஎஸ்”. இந்த நிகழ்ச்சியில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில இளைஞர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தனது அனுபவங்கள் மற்றும் இளம் தலைமுறையின் மாற்றங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இத்துடன், இந்த சிறப்பு நிகழ்ச்சியில், இளைஞர்களின் கேள்விகளுக்கும், அவர்களது சந்தேகங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, “வைப் வித் எம்கேஎஸ்” நிகழ்ச்சியின் புரோமோவை முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று (டிச. 23) வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், “வைப் வித் எம்கேஎஸ்” நிகழ்ச்சி புதன்கிழமை மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The promo for the "Vibe with MKS" program, where the Tamil Nadu Chief Minister interacts with the younger generation, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சட்டமன்றத்தில் உட்கார ஆசையில்லை! பாஜகவுக்காக உழைக்க மட்டுமே ஆசை” சரத்குமார் பேட்டி

இபிஎஸ் உடன் கூட்டணி இல்லை - பழனிசாமிக்கு பாடம் புகட்டுவோம் : ஓபிஎஸ்

60 நாள்களில் படப்பிடிப்பை முடித்த கென் கருணாஸ்!

தில்லி காற்று மாசு : 11 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆம் ஆத்மியே காரணம்: பாஜக

கௌதம் கம்பீரை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமா? அமித் மிஸ்ரா பதில்!

SCROLL FOR NEXT