மகாநதி தொடரின் படப்பிடிப்பு விடியோ. 
செய்திகள்

மகாநதி தொடர் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சண்டை! வைரல் விடியோ!!

இணையத்தில் வைரலாகும் மகாநதி தொடரின் படப்பிடிப்பு விடியோ.

இணையதளச் செய்திப் பிரிவு

மகாநதி தொடரின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட விடியோவொன்றை தொடர் குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரவீன் பென்னட் இயக்கி வரும் தொடர் மகாநதி தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி பலதரப்பட்ட ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்.

இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் இளைய தலைமுறையினராக இருப்பதால், இளம் வயதினரை அதிகம் கவர்ந்துள்ளது. டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

மகாநதி தொடரில், லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன், ஸ்வேதா, கமருதீன், பேபி காவியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அதிலும் லஷ்மிபிரியா, சுவாமிநாதன் ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களுக்கு சமூக ஊடங்களில் தனிப்பட்ட பக்கங்களை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.

தந்தையை இழந்த 4 சகோதரிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டும், அவர்களின் திருமண வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தியும் இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மகாநதி தொடரின் திரைக்குப் பின்னணியில் எடுக்கப்பட்ட சண்டை வீடியோவை(Behind the Scenes Video) தொடர் குழு பகிர்ந்துள்ளது.

மகாநதி தொடரில் இந்த அடிதடி காட்சி பரபரப்பாக காண்பிக்கப்பட்டாலும், திரைக்கு பின்னால் நகைச்சுவையாகவே எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடியோ இணையத்தில் வைரலானதோடு, ரசிகர்களால் பலரால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

The series has released a video of the Mahanadi series' filming on the internet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மு.க. ஸ்டாலின் லெக் ஸ்பின்னரா? ஆஃப் ஸ்பின்னரா? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!

2025: ராகுல் காந்தி வீசிய வாக்குத் திருட்டு குண்டுகள்!!

பிக் பாஸ் வீட்டில் பூரியால் வெடித்த சண்டை! என்ன நடந்தது?

இயேசு கிறிஸ்து காட்டிய பாதையில்..! - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!

முடி உதிர்தல் பிரச்னையா? காரணம் என்ன?

SCROLL FOR NEXT