நடிகர் சிவ ராஜ்குமார் படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகனின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
’சப்த சாகரதாச்சே எல்லோ’ பட இயக்குநர் ஹேமந்த் எம் ராவ் இயக்கத்தில் தனஞ்செயா, சிவ ராஜ்குமார் ’666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.
ஏற்கெனவே சிவ ராஜ்குமாரை வைத்து ’பைரவன கொனே பாட’ எனும் படத்தை பாதியிலேயே நிறுத்தி வைத்துள்ளார்கள்.
சிவ ராஜ்குமார் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தனது ’666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்’ படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் இணைந்துள்ளார்.
இதன் முதல் பார்வை போஸ்டரைப் பகிர்ந்த இயக்குநர், “பெருங்குழப்பத்தில் சிறகடித்தல்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.