இயக்குநர் ராம் கோபால் வர்மா, ரன்வீர் சிங் 
செய்திகள்

தென்னிந்திய சினிமாவை எட்டி உதைத்து... சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!

துரந்தர் திரைப்படம் குறித்து ராம் கோபால் வர்மா...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துரந்தர் திரைப்படம் ஹிந்தியிலேயே ரூ. 1000 கோடியை வசூலித்து பாலிவுட்டையே மிரட்டி வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களும் சேர்த்து ரூ. 250 கோடியில் உருவானது. முதல் பாகமே மிகப்பெரிய லாபமாக அமைந்ததால் அடுத்தாண்டு மார்ச் மாதம் திரைக்கு வரும் துரந்தர் - 2 படத்திற்கு பலரும் காத்திருக்கின்றனர்.

ரசிகர்கள் மட்டுமல்லாது பல மொழி இயக்குநர்களும் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில், இயக்குநர் ராம் கோபால் வர்மா, “பாலிவுட் மீதான தென்னிந்திய சினிமாவின் படையெடுப்பை துரந்தர் என்கிற திரைப்படம் தனது இடது காலால் எட்டி உதைத்துள்ளது. வலது கால் துரந்தர் இரண்டாம் பாகத்திற்காகத் தயாராகியுள்ளது. முதல் பாகம் அவர்களை அச்சுறுத்தியிருந்தால், இரண்டாம் பாகம் மிரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவை ராம் கோபால் வர்மா தாக்கியதால் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

ram gopal varma criticized south indian movies through dhurandhar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“நவம்பரில் VIJAY கண்டிப்பாக திரும்ப நடிக்க வருவார்!” நடிகை சிந்தியா பேட்டி

சொர்க்கவாசல் திறப்பு - புகைப்படங்கள்

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா எப்போது? ஜீ தமிழ் அறிவிப்பு!

திமுக என்ஜின் இல்லாத கார்: கூட்டணி எனும் லாரியே கட்டி இழுக்கிறது - இபிஎஸ்

இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக லசித் மலிங்கா நியமனம்!

SCROLL FOR NEXT