விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா நாயகி நடிக்கும் புதிய தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை வினுஷா தேவி. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் வினுஷா நடித்திருந்தார்.
தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட வினுஷா, அண்மையில் நிறைவடைந்த பனி விழும் மலர் வனம் என்ற தொடரிலும் நடித்திருந்தார்.
தற்போது, வினுஷா தேவி தெலுங்கு மொழியில் பிரபலமடைந்த சின்னி என்ற தொடரின் மறு உருவாக்கமாக எடுக்கப்படும் புதிய தொடரில் நடிகை வினுஷா நடித்து வருகிறார். இந்தத் தொடருக்கு சுற்றும் விழி சுடரே என்று பெயரிடப்பட்டுள்ளது.
தன்னுடைய குழந்தையை சிறையில் வளர்க்கும் கைதி வினுஷா, கால சூழலால் தனது மகளை பிரிகிறாள். இதனால், தாய் - மகளுக்கு இடையே நடைபெறும் சவால்களை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தத் தொடரில் மற்றொரு பிரதான பாத்திரத்தில் நடிகர் யுவன் மயில்சாமி நடிக்கிறார். வினுஷா தேவியின் மகளாக பேபி தன்ஷிகா குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார்.
இந்த நிலையில், சுற்றும் விழி சுடரே தொடர் வரும் ஜனவரி 5 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பூங்காற்று திரும்புமா தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.