ஜனநாயகன் / ப்ரஜின் படம் - எக்ஸ்
செய்திகள்

ஜனநாயகன் படத்தின் கதையைக் கூறிய பிக் பாஸ் ப்ரஜின்!

குறும்பட திரையிடல் நிகழ்ச்சியில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் கதைக்களம் குறித்து பிப் பாஸ் போட்டியாளர் ப்ரஜின் கூறியது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

குறும்பட திரையிடல் நிகழ்ச்சியில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் கதைக்களம் குறித்து நடிகரும் பிப் பாஸ் முன்னாள் போட்டியாளருமான ப்ரஜின் கூறிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய் - எச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜன. 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

விஜய்யின் கடைசிப் படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளது. சமீபத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்க, பிரமாண்டமான முறையில் மலேசியாவில் இசை வெளியீட்டு விழாவும் நடத்தப்பட்டது.

இதனிடையே விடைத்தாள் என்ற குறும்படத்தின் திரையிடல் சென்னை வடபழனியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், சின்ன திரை மற்றும் பிக் பாஸ் பிரபலங்களான ராணா, ப்ரஜின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரஜின், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இது குறித்து பெண்கள் தைரியமாக பேச வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஜன நாயகன் படத்தின் கதையே குட் டச், பேட் டச் (Good touch bad touch) என்பது பற்றிதான் என்றும் குழந்தைகளுக்கு இது குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ப்ரஜின்

ஜனநாயகன் திரைப்படத்தின் கதை குறித்து ப்ரஜின் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படத்தின் கதைக்களம் குறித்து போகிறபோக்கில் பேசிவிட்டாரே என்ற ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Bigg Boss 9 tamil Prajean narrated the story of the film Jananayagan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; ஸ்மிருதி மந்தனாவுக்கு ஓய்வு!

பிரதமர் மோடிக்கு 2026 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த முதல் உலகத் தலைவர்!

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு: முதல்பார்வை போஸ்டரை வெளியிடும் வெற்றிமாறன்!

2026-ன் முதல் ஸ்மார்ட்போன்! ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஜன. 6-ல் அறிமுகம்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.89.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT