புகழ் தந்தை காலமானார்: நகைச்சுவை நடிகர் புகழின் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார்.
விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் புகழ்.
பின்னர், எதற்கும் துணிந்தவன், டிஎஸ்பி, அயோத்தி, யானை உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்த புகழ், மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் புகழ் அவரது தந்தை முருகன் மறைந்த செய்தியை இன்று காலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகத்துடன் பகிர்ந்துள்ளார்.
அதில், ”அப்பா என்கிட்ட சொல்லாமல் எங்கேயும் போக மாட்டியே, தெய்வமே இப்படி சொல்லாம போய்டியே” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இவரின் பதிவுக்கு சின்னத் திரை நடிகர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.