நடிகர் யோகி பாபுவின் 300 ஆவது திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை பிரபல நடிகர் விஜய் சேதுபதி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் சிரித்தால் ரசிப்பேன் எனும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தாலும், 2009 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் அமீரின் ‘யோகி’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக அறியப்படுபவர் நடிகர் யோகி பாபு.
இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட ஏராளாமான மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இத்துடன், நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து வெளியான “மண்டேலா” எனும் படம் 68 ஆவது தேசிய விருதுகள் விழாவில் 2 விருதுகளை வென்றது.
இந்த நிலையில், யோகி பாபுவின் 300 ஆவது திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்ட்ரை பிரபல நடிகர் விஜய் சேதுபதி நாளை (ஜன. 1) காலை வெளியிடுவார் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் புதிய படத்தில் நடிகர் யோகி பாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், அருவி மதன், மைனா நந்தினி. அருள்தாஸ், சென்றாயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.