செய்திகள்

15 கோடி பார்வைகளைக் கடந்த கோல்டன் ஸ்பேரோ!

கோல்டன் ஸ்பேரோ பாடல் குறித்து..

DIN

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல் யூடியூப்பில் 15 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இதில், தனுஷ் சகோதரியின் மகன் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாடலான, ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதில், நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியிருந்தார்.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் அறிவு வரிகளில் தனுஷ், ஜி.வி. பிரகாஷ், அறிவு மற்றும் சுப்லாஷ்லினி உள்ளிட்டோர் பாடிய இப்பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் பலரும் மடிசார் புடவையில் ரீல்ஸ் செய்து வைரலாக்கினர்.

தற்போது, இப்பாடல் யூடியூப்பில் 15 கோடி (150 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. இப்படம் வருகிற பிப். 21 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT