நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் டீசர் 20 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர்கள் யஷ், ருக்மணி வசந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் டாக்ஸிக்.
நடிகர் யஷ் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் அறிமுக டீசர் வெளியானது. இதில், யஷ் ஒரு பெண்ணுடன் காருக்குள் நெருக்கமான உறவில் இருப்பதும் பின், வெளியே வந்து எதிரிகளைக் கொடூரமாகத் தாக்குவதுமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் ஒரு பெண் இயக்குநர் இப்படியான காட்சிகளுடன் அழுத்தமான டீசரை வெளியிட்டிருப்பதும் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், யூடியூபில் டாக்ஸிக் டீசர் இதுவரை 8 கோடி (80 மில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், பிற சமூக வலைதளங்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 20 கோடி (200 மில்லியன்) பார்வைகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.
டீசர் உருவாக்கிய எதிர்பார்ப்பு படத்தின் மீது இருப்பதால் டாக்ஸிக் வெளியீட்டுத் தேதிக்கு பலரும் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.