செய்திகள்

விஜய் தேவரகொண்டாவின் புதிய படம்: டீசர் வெளியீடு!

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12-வது திரைப்படம் குறித்து...

DIN

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12 வது திரைப்படமான ’கிங்டம்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா நுவ்விலா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பெல்லி சூப்புலு, எவடே சுப்ரமணியம் போன்ற படங்களில் நடித்த இவர் ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார்.

இவர் கடைசியாக கல்கி திரைப்படத்தில் அர்ஜுனர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

’கிங்டம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசருக்கு தமிழில் நடிகர் சூர்யாவும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆரும் பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெறுவதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வருகிற மே 30 அன்று தமிழ். தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திரன் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதி மொழி ஏற்பு

கல்லூரியில் கருத்தரங்கம்

தமிழ் வளரச் செய்தவா் தம்பிரான் சுவாமிகள்

‘சுயமரியாதையுடன் வாழ கல்வியே துணை நிற்கும்’

SCROLL FOR NEXT