நீதிமன்றத்தில் இளையராஜா ஆஜர்  
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜரான இளையராஜா!

சென்னை நீதிமன்றத்தில் இளையராஜா ஆஜரானது தொடர்பாக...

DIN

பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.

கடந்த 2010ஆம் ஆண்டு தாங்கள் உரிமம் பெற்றுள்ள பாடல்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில், தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களில் பாடல்களின் உரிமத்தை பெற்றதற்கான ஒப்பந்தம் இசையமைப்பாளர் இளையராஜா மனைவி பெயரிலுள்ள நிறுவனத்துடன் போடப்பட்டதாகவும், அந்த பாடல்களை தற்போது யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் எதிர்மனுதாரராக இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது மனைவி பெயரிலுள்ள நிறுவனம் சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை காலை நேரில் ஆஜரான இளையராஜா சாட்சியம் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT