செய்திகள்

'காதல்', 'கவிதை': சினேகன் குழந்தைகளுக்கு கமல் சூட்டிய பெயர்!

சினேகன் குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்.

DIN

பாடாலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா தம்பதியினருக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், அவர்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரான சினேகன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

இவர் எழுதிய பாடல்களான ஆட்டோகிராஃப் படத்தில் இடம் பெற்றிருந்த ஞாபகம் வருதே மற்றும் ராம் படத்தில் இடம் பெற்றிருந்த ஆராரிராரோ பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களாகும்.

சினேகன் திருமணம் செய்துகொண்ட நடிகை கன்னிகா, சன் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாண வீடு' தொடரில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் 'தேவராட்டம்', 'ராஜவம்சம்' படங்களிலும் பிரதான வேடங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிக்க: திருமண தேதியை அறிவித்த அமீர் - பாவ்னி ஜோடி!

இதனிடையே, சினேகன் மற்றும் கன்னிகா காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

அண்மையில் சினேகன் - கன்னிகா தம்பதியினருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.

தங்க வளையல் அணிவிக்கும் கமல்ஹாசன்.

இந்த நிலையில், சினேகன் - கன்னிகாவின் குழுந்தைகளுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் 'காதல்', 'கவிதை' எனப் பெயர் சூட்டியுள்ளார். தங்க வளையல்களையும் அணிவித்துள்ளார்.

இது பற்றி கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “காதலர் தினத்தில்... எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையல்களோடு ... "காதல்" கன்னிகா சினேகன் என்ற பெயரையும் "கவிதை " கன்னிகா சினேகன் என்ற
பெயரையும்... அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்ம பூஷன் கமல்ஹாசனுக்கு எங்கள் அன்பின் நன்றிகள். நீங்களும் வாழ்த்துங்கள் எங்கள் காதல் - கவிதை-யை” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT