நிவின் பாலி 
செய்திகள்

‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ நிவின் பாலியின் புதிய படம்!

நிவின் பாலியின் புதிய படம் குறித்து...

DIN

நடிகர் நிவின் பாலியின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின் பாலிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றிப்படம் என எதுவும் அமையவில்லை. காரணம், பிரேமம் படத்தில் மிக அழகாகத் தோற்றமளித்த நிவின், அதன்பிறகு மெல்ல மெல்ல அதீத எடைகொண்ட தோற்றத்திற்குச் சென்றார்.

அதே உடலுடன் சில படங்களிலும் நடித்தார். ஆனால், அவை தோல்விப் படங்களாகவே அமைந்தன. இதனால், நிவினின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது, உடல் பருமனைக் குறைத்து மெலிதான தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், நிவின் பாலி இயக்குநர் ஆதித்யன் சந்திரசேகர் இயக்கும் ’மல்டிவெர்ஸ் மன்மதன்’ என்கிற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஃபேண்டசி கலந்த சூப்பர் ஹீரோ கதையாக இப்படம் இருக்கலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

SCROLL FOR NEXT