செய்திகள்

எஸ்கே - 23 பெயர் டீசர் தேதி!

எஸ்கே - 23 பெயர் டீசர் குறித்து...

DIN

சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் பெயர் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் மற்றும் பிஜு மேனன் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, திடீரென நடிகர் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தை இயக்க ஏ. ஆர். முருகதாஸ் மும்பை சென்றார்.

இதனால், சில வாரங்கள் எஸ்கே - 23 படத்தின் படப்பிடிப்பு நிகழாமல் இருந்தது. பின், மீண்டும் சில நாள்கள் நடைபெற்றது. பொங்கலை முன்னிட்டு டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த அறிவிப்பும் இல்லை.

இந்த நிலையில், எஸ்கே - 23 படத்தின் பெயர் கிளிம்ஸ் விடியோவை பிப். 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியொரு மேக்கிங்கா? பாராட்டுகளைப் பெறும் காந்தாரா சாப்டர் - 1!

ட்ரீம் கேர்ள்... மாளவிகா மோகனன்!

Kantara chapter 2 public review - காந்தாரா 2 எப்படி இருக்கு? | Rishab Shetty

நுனோ மென்டிஸ் அசத்தல்: 90-ஆவது நிமிஷத்தில் கோல்! பார்சிலோனாவை வென்ற பிஎஸ்ஜி!

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT