முகப்பு
செய்திகள்

பைசன் படப்பிடிப்பு நிறைவு!

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு...

Updated On : 17 பிப்ரவரி, 2025 at 9:59 AM
பகிர்:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது..

நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் வெற்றிப்பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ரீமெக்கான இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, மகான் படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்து பெயர்ப் பெற்றார்.

துருவ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இதில், நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும், முக்கிய கதாபாத்திரத்தில் ரஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘பைசன் - காளமாடன்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →