முகப்பு
செய்திகள்

7ஜி ரெயின்போ காலனி - 2 புதிய போஸ்டர்!

7ஜி ரெயின்போ காலனி - 2 அப்டேட் போஸ்டர் குறித்து...

Updated On : 1 ஜனவரி, 2025 at 12:07 PM
பகிர்:
Updated On : 1 ஜனவரி, 2025 at 11:59 AM

செல்வராகவன் இயக்கும் 7ஜி ரெயின்போ காலனி - 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஜோடியாக நடித்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

சில மாதங்களாக 7ஜி ரெயின்போ காலனியின் இரண்டாவது பாகத்திற்கான திட்டத்தில் செல்வராகவன் ஈடுபட்டிருந்தார்.

Advertisement

Updated On : 1 ஜனவரி, 2025 at 11:59 AM

இப்பாகத்திலும் ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார்.  நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அனஸ்வரா ’சூப்பர் சரண்யா’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகக் கூறி புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.