முத்துக்குமரனுடன் ரயான் வாக்குவாதம் படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 8: 5 பேர் சேர்ந்து ஆடுவது நியாயமான ஆட்டமா? முத்துக்குமரனிடம் ரயான் கேள்வி!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒருவரை வெளியேற்ற 5 பேர் சேர்ந்து ஆடுவது நியாயமான ஆட்டமா?

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒருவரை வெளியேற்ற 5 பேர் சேர்ந்து ஆடுவது நியாயமான ஆட்டமா? என முத்துக்குமரனிடம் ரயான் கேள்வி கேட்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை (87வது நாள்) எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சி முடிய இன்னும் 3 வாரங்களே உள்ளன. இதனால் போட்டியாளர்களிடையே கடுமையான போட்டி எழுந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் 87வது நாளான இன்று ரயான் - முத்துக்குமரன் இடையிலான விவாதம் காரசாரமாக நடைபெற்றது. ’ரயானை போட்டியில் இருந்து வெளியேற்ற 5 ஆண்கள் சேர்ந்து ஆடுவது நியாயமான ஆட்டமே இல்லை. ஆனால் அதனைத்தான் நீங்கள் செய்தீர்கள்’ என முத்துக்குமரனிடம் ரயான் கேள்வி எழுப்புகிறார்.

மஞ்சரியும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ’ரயானை வெளியேற்ற நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டீர்கள்’ எனக் கூறுகிறார்.

இதற்கு பதிலளித்த முத்துக்குமரன், ’ரயானை வெளியேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு எதையும் செய்யவில்லை’ என விளக்க முயற்சிக்கிறார்.

பயந்துதான் இப்படி செய்திருக்கிறீர்கள் என ரயான் கூறுகிறார். அப்போது பேசிய முத்துக்குமரன், ’பயந்து ஆடும் அளவுக்கு நீ பெரிய ஆள் இல்ல ரயான்’ எனக் கூறிவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ரயான், அதனை வெளிக்காட்டாமல், ஆல் தி பெஸ்ட் எனக் கூறுகிறார். பதிலுக்கு முத்துக்குமரனும் ரயானுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.

முத்துக்குமரன் வலிமையான போட்டியாளராக அறியப்படுகிறார். இதேபோன்று ரயானும் சுயமாக தனித்து ஆடும் போட்டியாளராக கருதப்படுகிறார். இவர்கள் இருவரும் கருத்து ரீதியாக மோதிக்கொண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT