பவித்ரா, மஞ்சரி படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 8: மீண்டும் மஞ்சரி - பவித்ரா மோதல்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் மீண்டும் பவித்ராவுடன் மஞ்சரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் மீண்டும் பவித்ராவுடன் மஞ்சரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு முன்பு ஏஞ்சல்களும் டெவில்களும் போட்டியின்போது இருவரிடையே கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சி முடிய இன்னும் ஒருசில வாரங்களே உள்ளதால், போட்டியாளர்களிடயே ஆட்டம் விறுவிறுப்படைந்துள்ளது.

13வது வாரத்தில் 4வது நாளான இன்றும் டிக்கெட் டூ ஃபினாலே எனப்படும் நேரடியாக இறுதிப்போட்டியாளராகத் தகுதி பெறுவதற்காக போட்டிகள் நடைபெற்றன.

இதில் உடலில் தடுப்புகளைக் கட்டிக்கொண்டு ஆங்காங்கே துண்டுகளாக உள்ள படங்களை சேகரித்து எடுத்து தன்னுடைய முகம் கொண்ட முழு படத்தை உருவாக்க வேண்டும். இதில் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் முந்திச் செல்வதையும் தடுக்கலாம்.

இப்போட்டியில் மற்றவர்களின் புகைப்படங்களை எடுத்ததைப் போன்று உன்னுடைய புகைப்படத்தை எடுக்கவும் முயற்சித்தேன் என மஞ்சரி கூறுகிறார்.

ஆனால், பவித்ரா இதற்கு மறுப்பு தெரிவித்து, நீ அப்படி செய்யவில்லை, போட்டியை சீரழிக்கிறாய். நீங்கள் பேசிவைத்துக்கொண்டு விளையாடுகிறீர்கள் எனக் கூறுகிறார்.

நாங்கள் பேசிவைத்துக்கொண்டு புகைப்படத் துண்டுகளை எடுக்கவில்லை, ஒருவருடைய படங்களை இன்னொருவர் எடுத்தால் இந்த ஆட்டத்தை ஆடவே முடியாது என்கிறார் மஞ்சரி.

இதற்கு பதிலளித்த பவித்ரா, அது உன்னுடைய புரிதல் என பதிலடி கொடுக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சரி, பவித்ராவால் டென்ஷன் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். இது தொடர்பான முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: இளம் தலைமுறை போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக மாறும் தீபக்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT