செய்திகள்

பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகும் படங்கள்?

பொங்கல் வெளியீட்டிலிருந்து சில படங்கள் விலகுவதாகத் தகவல்...

DIN

பொங்கல் வெளியீட்டாக அறிவிக்கப்பட்ட சில படங்கள் வெளியீட்டுத் தேதியை மாற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால், புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த லைகா நிறுவனம், சில தவிர்க்க முடியாத காரணத்தால் விடாமுயற்சி பொங்கல் வெளியீட்டில் இருந்து விலகுகிறது. விரைவில் மறுஅறிவிப்பு வெளியாகும் என புதிய அறிவிப்பை வெளியிட்டனர். இது அஜித் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

விடாமுயற்சி விலகியதால், ஜன. 10 கேம் சேஞ்சர், வணங்கான் மட்டுமே வெளியாக இருந்தன. அதனால், இந்தப் பொங்கல் விடுமுறையைப் பயன்படுத்த பிப்ரவரி வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டிருந்த சிறிய படங்கள் பொங்கல் வெளியீடுக்கு தயாராகின.

குறிப்பாக, மெட்ராஸ்காரன் ஜன. 10 அன்றும் ஜன. 12 ஆம் தேதி மதகஜராஜா படமும் ஜன. 14-ல் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம் ஆகிய படங்களும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டன.

அதேநேரம், ஜன. 10 வெளியீட்டை அறிவித்த சிபி சத்யராஜின் 10 ஹவர்ஸ், சண்முக பாண்டியனின் படை தலைவன், இயக்குநர் சுசீந்திரனின் 2கே லவ் ஸ்டோரி ஆகிய படங்களுக்கு தற்போது போதிய திரைகள் கிடைக்காததால் தங்களின் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT