செய்திகள்

பல இயக்குநர்கள் இஷ்டத்துக்கு படப்பிடிப்பு நடத்துகிறார்கள்: ராஜீவ் மேனன்

அதிக படப்பிடிப்பு செய்யும் இயக்குநர்களை சாடியுள்ளார் ராஜீவ் மேனன்...

DIN

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் அதிக நாள்கள் படப்பிடிப்பு செய்யும் இயக்குநர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியளவில் முன்னணி ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர் ராஜீவ் மேனன். ’மின்சார கனவு’, ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’, ‘சர்வம் தாளமயம்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அக்கதாபாத்திரம் கவனிக்கும்படியாகவும் அமைந்திருந்தது.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற ராஜீவ் மேனன், “சினிமாவில் டிஜிட்டல் அதிகமானதும் பல இயக்குநர்கள் இஷ்டத்துக்குப் படப்பிடிப்பு நடத்துகின்றனர். மணிரத்னம் இயக்கிய குரு படத்தின் படப்பிடிப்பு 3 மாதங்களில் முடிந்தது. கடல் கொஞ்சம் அதிகம். மணிரத்னம் படத்தில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால், இப்போது பல இயக்குநர்கள் காட்சிகளை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதற்குள் சிக்கினால் அவ்வளவுதான். ’என்னுடன் பயணியுங்கள்’ என இயக்குநர்கள் சொல்கின்றனர். இது அடிமைத்தனம் மாதிரி இருக்கிறது. தனக்குத் தோன்றும்போது, சிந்தனை வரும்போது என இயக்குநர்கள் நீண்டகாலம் படப்பிடிப்பில் இருக்கின்றனர். ஜூராசிக் பார்க் திரைப்படத்தை 72 நாள்களில் எடுத்து முடிக்கின்றனர்.

ஆனால், நம்மால் சரியாகத் திட்டமிட முடியவில்லை. ஒரு திரைப்படத்திற்குப் பின் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களின் நேரத்தையும் இது பாதிக்கிறது. உண்மையில், திட்டமில்லாமல் படப்பிடிப்பை நடத்தினால் பெரிதாக பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான்.

இப்போது, பிரம்மாண்டம் வேண்டும் என்பதற்காக பல காட்சிகளிலும் 100 ஜூனியர் நடிகர்களை நிறுத்துவது, 4 கிரேன்களைக் கொண்டுவருவது என அவர்களுக்கான ஆடை, உதவி இயக்குநர்கள் என எவ்வளவு செலவு? இது ஆரோக்கியமான சூழலில்லை.

96, லப்பர் பந்து போன்றவை சிறிய படங்களாக இருந்தாலும் மிக சுவாரஸ்யமாக இருந்தது. சமீபத்தில், என்னை மிகவும் கவர்ந்த திரைப்படம் மஞ்ஞுமல் பாய்ஸ். ஒரு படத்திற்கு நாயகன் முக்கியமில்லை என்கிற விஷயத்தை இப்படத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு காட்சியும் வீணடிக்கப்படவில்லை.” எனத் தெரிவித்தார்.

இயக்குநர் வெற்றி மாறன் விடுதலை - 1 மற்றும் விடுதலை - 2 படங்களின் படப்பிடிப்பை 270 நாள்கள் வரை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்டம்பர் மாதப் பலன்கள் - கடகம்

செப்டம்பர் மாதப் பலன்கள் - மிதுனம்

செப்டம்பர் மாதப் பலன்கள் - ரிஷபம்

செப்டம்பர் மாதப் பலன்கள் - மேஷம்

இறுதிப் போட்டியில் மோதல்: பயிற்சியாளர் மீது எச்சில் துப்பிய இன்டர் மியாமி வீரர்!

SCROLL FOR NEXT