செய்திகள்

ரஜினியின் பயோபிக்கை எடுக்க ஆசை: ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் நடிகர் ரஜினி குறித்து பேசியுள்ளார்...

DIN

நடிகர் ரஜினிகாந்த்தின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க ஆசை இருப்பதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் நாளை (ஜன. 10 ) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

படத்தின் புரமோஷனுக்கான நேர்காணலில் பங்கேற்ற ஷங்கரிடம், ‘ஏதாவது வாழ்க்கை வரலாற்று (பயோபிக்) படத்தை எடுக்க விருப்பம் இருக்கிறதா?’ எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஷங்கர், “எடுத்தால் நடிகர் ரஜினிகாந்த்தின் வாழ்க்கையைத்தான் திரைப்படமாக எடுக்க வேண்டும். இதுவரை பயோபிக் எண்ணம் இல்லை. ஆனால், கேட்டவுடன் அவரின் பெயர்தான் நியாபகம் வருகிறது. அவரைப்பற்றி என்ன சொல்வது? மிக இனிமையானவர்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அப்கிரேடட் வெர்ஷன்... சைத்ரா அச்சார்!

பூக்கி பட பூஜை விழா - புகைப்படங்கள்

குஸ்திக்கு ரெடி... ஐஸ்வர்யா லட்சுமி!

'லோகா' படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

முதல் ஒருநாள்: இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

SCROLL FOR NEXT