முகப்பு
செய்திகள்

சசிகுமார் - ராஜு முருகன் படப்பிடிப்பு நிறைவு!

சசிகுமார் - ராஜு முருகன் படம் குறித்து...

Updated On : 12 ஜனவரி, 2025 at 10:26 AM
பகிர்:

இயக்குநர் ராஜு முருகன் இயக்கிவந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குநர் ராஜு முருகன் இயக்கிய ஜப்பான் திரைப்படம் தோல்விப்படமானதைத் தொடர்ந்து, நடிகர் சசிகுமாரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இதில், கன்னடத்தில் வெளியான சப்தசாகரச்சே எல்லோ படத்தில் நடித்த சைத்ரா நாயகியாக நடித்துள்ளார். இது, ஜோக்கர் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் தகவல்.

படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று வந்த நிலையில், முழுமையாக படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.