மேயாத மான் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ரத்னகுமார் இயக்கிவந்த 29 என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டுத் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளதால் இது எல்சியூவில் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
29 எனப் பெயரிட்ட இந்தப் பட டீசரின் காட்சிகளைப் பார்க்கும்போது 29 வயது ஆணின் வாழ்க்கையும், காதலுமாக இப்படத்தின் கதை இருக்கலாம் எனத் தெரிகிறது.
இப்படத்தின் நாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்கள். நடிகர் விது ஜிகர்தண்டா - 2, ரெட்ரோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.
இறுதியாக, ரத்னகுமார் குலு குலு திரைப்படத்தை இயக்கியிருந்தார். மாஸ்டர், லியோ ஆகிய திரைப்படங்களுக்கு வசனம், திரைக்கதை எழுத லோகேஷ் கனகராஜுக்கு உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.