அஜித்திடம் பாடல் பாடி காண்பித்த ரசிகர் படங்கள்: எக்ஸ் / அஜித்குமார் ஃபேன்ஸ் கிளப்
செய்திகள்

அஜித்திடம் பாடல் பாடி காண்பித்த ரசிகர்..! ரசிகரின் பெயரைக் கேட்டு சிரித்த அஜித்!

நடிகர் அஜித்திடம் அவரது பட பாடல் பாடி காண்பித்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

DIN

நடிகர் அஜித்திடம் அவரது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட பாடல் பாடி காண்பித்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் 2000இல் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றளவும் அதன் பாடல்கள் பேசப்பட்டு வருகின்றன.

துபையில் நடிகர் அஜித்திடம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட பாடல் பாடி காண்பித்த ரசிகரை பாராட்டி அவரிடம் உங்களது பெயரென்ன என அஜித் கேட்பார். அதற்கு ரசிகர், “அஜித்” எனக் கூறியதும் நடிகர் அஜித் அதிர்ச்சியடைந்து பின்னர் சிரிப்பார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்தில் நடித்துமுடித்துள்ளார். விடாமுயற்சி பிப்.6இல் வெளியாகிறது. தற்போது, அஜித் குமார் ரேஸிங்கில் முழுகவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் துபையில் நடைபெற்ற 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியாவிலிருந்து ’அஜித் குமார் ரேசிங்’ என்கிற பெயரில் நடிகர் அஜித் குமார் தன் குழுவினர் கலந்துகொண்டார். அதில், 911 ஜிடி3 ஆர் என்கிற கார் பந்தயப் பிரிவில் அஜித் குமார் ரேஸிங் (901) அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தினர்.

இதனைத்தொடர்ந்து, போர்ச்சுகலில் நடைபெறும் தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025-ல் அவரது அணி கலந்துகொள்கிறது.

இந்தத் தொடரின் முதல் சுற்றில் 4.653 கி.மீ அளவிலான பந்தயச் சுற்றை (லேப்) 1.49.13 லேப் டைமில் நிறைவு செய்து அடுத்தச் சுற்றுக்கு அஜித்குமார் தகுதி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

SCROLL FOR NEXT