செய்திகள்

‘3 தசாப்தங்களுக்குப் பின் இருவர்...’: பிரகாஷ் ராஜ்!

மணிரத்னம், பிரகாஷ் ராஜ் சந்திப்பு...

DIN

நடிகர் பிரகாஷ் ராஜ் இயக்குநர் மணிரத்னத்துடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால், பிரகாஷ் ராஜ் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இருவர். தமிழகத்திலிருந்த மிக முக்கியமான இரண்டு ஆளுமைகளின் நட்பு மற்றும் வாழ்க்கையை மறைமுகமாக பேசிய படமென்பதால் இன்றுவரை மணிரத்னம் இயக்கிய படங்களில் இருவருக்கு சிறப்பான இடம் உண்டு.

அதன்பின், மணிரத்னம் இயக்கிய ஒகே கண்மணி, செக்க சிவந்த வானம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த நிலையில், கேரளத்தில் நடைபெற்று வரும் இலக்கிய விழாவில் பிரகாஷ் மற்றும் மணிரத்னம் இருவரும் கலந்துகொண்டு உரையாடலில் பங்கேற்றனர்.

இதைக் குறிப்பிட்ட பிரகாஷ் ராஷ், ‘3 தசாப்தங்களுக்குப் பிறகு இருவர். பேரின்பம்’ எனப் பதிவிட்டு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT