நடிகை அபிநயாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அபிநயா. பிறவியிலிருந்தே வாய் பேச, காது கேட்க முடியாத இவர் தன் நடிப்புத் திறனால் ரசிகர்களின் விருப்ப நாயகி பட்டியலில் இருக்கிறார்.
ஈசன், வீரம், தாக்க தாக்க உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல கதாபாத்திரங்களை வழங்கின. இறுதியாக, தமிழில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிக்க: அதிக விலைக்கு விற்கப்பட்ட ஜன நாயகன் வெளிநாட்டு உரிமம்?
இதற்கிடையே, நடிகர் விஷாலும் அபிநயாவும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இத்தகவலை இருவரும் மறுத்தனர்.
அண்மையில், மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜுடன் நடித்த பனி திரைப்படம் அபிநயாவுக்கு பெரிய பாராட்டுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளதால் மீண்டும் நாயகியாக வலம் வருவார் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், அபிநயாவுக்கும் அவரின் நீண்ட நாள் நண்பருக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.