விஜய் ஆண்டனி, சிவகார்த்திகேயன் பட போஸ்டர்.  
செய்திகள்

படத் தலைப்பு பிரச்னை: ‘பராசக்தி' யாருக்கு சொந்தம்?

பராசக்தி என்ற படத் தலைப்புக்கு தமிழ் சினிமாவில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

DIN

பராசக்தி என்ற படத் தலைப்புக்கு தமிழ் சினிமாவில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு ‘பராசக்தி’ என பெயரிட்டுள்ளதை டீசர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விஜய் ஆண்டனியின் 25-வது படத்தின் பெயர் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு தமிழில் சக்தித் திருமகன் என்றும் தெலுங்கில் பராசக்தி என்றும் பெயரிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார். பான் இந்திய மொழிகளில் உருவாகும் இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

விஜய் ஆண்டனி தன்னிடம் பதிப்பித்த ஆதாரம் உள்ளதாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தன்னிடமுள்ள பாரசக்தி தலைப்பை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துக்கு அளித்ததாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனால் இந்தத் தலைப்பு யாருக்கு சொந்தமானது என்ற பிரச்னை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT