செய்திகள்

மிஷ்கின் பேச்சில் தவறு இல்லை: சமுத்திரக்கனி

மிஷ்கின் குறித்து சமுத்திரக்கனி...

DIN

இயக்குநர் மிஷ்கின் பேச்சுக்கு நடிகர் சமுத்திரக்கனி ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாட்டல் ராதா டிரைலர் வெளியீட்டு விழாவில் மதுப்பழக்கத்தின் அடிமைத்தனம் மற்றும் தீங்கைக் குறித்து பலர் பேசினர். ஆனால், இயக்குநர் மிஷ்கின் மதுப்பழக்கத்தைக் கொண்டாடுவதாகக் கூறி தன் பேச்சை துவங்கினார்.

பேச்சின் இடையே, பலமுறை தகாத வார்த்தைகளையும் பிறரைக் காயப்படுத்தும் தொனியிலும் பேசியது சிலருக்கு சிரிப்பை வரவழைத்தாலும் வெற்றி மாறன், லிங்குசாமி உள்ளிட்டவர்களுக்கு சங்கடத்தைக் கொடுத்தது அவர்களின் முகத்தில் தெரிந்தது. மிஷ்கினின் இப்பேச்சு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: ஓடிடியில் புஷ்பா - 2!

இதனால், பேட் கேர்ள் டீசர் நிகழ்வில் பேசிய மிஷ்கின், தன் பேச்சுக்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டார். எதார்த்தமாக பேசியதை இவ்வளவு பெரிய விவாதமாக்க வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் சமுத்திரக்கனியிடம் ‘மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் பேசியதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்கப்பட்டது.

அதற்கு, சமுத்திரக்கனி, “மிஷ்கின் ஒரு அன்பின் வெளிப்பாட்டில் அப்படி பேசியிருக்கிறார். மிஷ்கினை அறிந்தவர்களுக்குத் தெரியும் அவர் எந்த அர்த்தத்தில் பேசினார் என. அவர் பேசும்போது நீங்கள் (பத்திரிகையாளர்கள்) சிரித்துக்கொண்டுதானே இருந்தீர்கள்? அப்போது எதையும் கேட்காமல் இப்போது கேட்கிறீர்கள். மிஷ்கின் பேசியதில் எந்த தவறுமில்லை. என் ஆதரவு அவருக்குத்தான்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் வசூலைக் கூலி முறியடிக்குமா? திருப்பூர் சுப்பிரமணியம் பதில்!

சிறுவன் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை!

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை!

3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை!

2வது நாளாக தங்கம் விலை குறைந்தது!

SCROLL FOR NEXT