தனம் தொடரில் சத்யா  படம் - இன்ஸ்டாகிராம்
செய்திகள்

சீரியலுக்காக கட்டடத் தொழிலாளியாக மாறிய நடிகை!

தனம் தொடருக்காக சின்ன திரை நடிகை சத்யா தேவராஜன், கட்டடத் தொழிலாளியாகவே மாறியுளார்.

DIN

தனம் தொடருக்காக சின்ன திரை நடிகை சத்யா தேவராஜன், கட்டடத் தொழிலாளியாகவே மாறியுளார்.

படப்பிடிப்பு தளத்தில் இதற்காகத் தயாராகும் விடியோவை சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு தனம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சின்ன மருமகள் தொடரை இயக்கிவரும் மனோஜ் குமார், தனம் தொடரையும் இயக்குகிறார்.

சத்யா தேவராஜன் - ஸ்ரீகுமார் முதன்மை பாத்திரங்களில் நடித்துவரும் இத்தொடரில், கணவரின் மறைவுக்குப் பிறகு கணவரின் ஆட்டோவை ஓட்டி அவரின் குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் மருமகளின் கதையாக தனம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

தனம் தொடரிலிருந்து...

நடுத்தரக் குடும்பத்து பிரச்னைகளை திரைக்கதையாக்கி, நடிகர்களை இயல்பாக நடிக்கவைப்பதால், இத்தொடருக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

சத்யா தேவராஜன்

இந்தத் தொடரில் தற்போது கட்டட வேலை செய்யும் தொழிலாளியாக நடிகை சத்யா நடித்து வருகிறார். இதற்காக அர்ப்பணிப்புடன் கட்டடத் தொழிலாளியாக மாறி, அவர் நடிக்கும் விடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | இதயம் தொடரில் இருந்து விலகிய பாரதி கண்ணம்மா நடிகை!

Serial actress Sathya Devarajan transformed into a construction worker for the series dhanam in vijay tv.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

SCROLL FOR NEXT